--- --:--:-- --

திண்டுக்கல் மருத்துவமனையில் செல்போனில் டார்ச் அடித்து சிகிச்சை..!

1

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக செல்போன் டார்ச் மூலம் சிகிச்சை அளிக்கும் சூழல் ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின.

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மாதாந்திர மின்தடை காரணமாக நேற்று காலை 9 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் அறிவிக்கப்பட்டபடி மாலை 5 மணிக்கு வரவில்லை என தெரிகிறது. 3 மணி நேரம் தாமதமானதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செல்போன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

மேலும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் சிலருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் அதனை இயக்க ஆட்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

 

Right Menu Icon