--- --:--:-- --

நடிகர் மீது வாட்டர் பாட்டிலை வீசி எறிந்த ரசிகர்..!

3

செல்பி எடுக்கும்பொழுது சரியாக போஸ் கொடுக்காததால் ஆத்திரத்தில் ரசிகர் ஒருவர் நடிகர் மீது தண்ணீர் பாட்டில் எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் இந்தி சின்னத்திரை நடிகர் ஆகாஷ் சவுத்ரி. அவர் மும்பையில் பத்திரிக்கையாளர்களோடு பேசிக்கொண்டிருந்த பொழுது ரசிகர்கள் சிலர் அவரோடு செல்ஃபி எடுக்க முயன்றனர். அதனை ஆகாஷ் சௌத்திரி தடுத்துள்ளார்.

 

அதனையும் மீறி ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அதனால் செல்பிக்கு போஸ் கொடுக்காமல் வேண்டா வெறுப்பாக ஆகாஷ் சவுத்ரி அலட்சியமாக நின்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் ரசிகர் ஒருவர் அவர் மீது தண்ணீர் பாட்டிலை வீசியுள்ளார்.

 

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ரசிகரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Right Menu Icon