--- --:--:-- --

25 கோடி மதிப்புள்ள சொத்துகள் அபகரிப்பு: நடிகை கௌதமி புகார்

7

25 கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்களை ஏமாற்றி படித்த நபர்களை கைது செய்யுமாறு நடிகை கௌதமி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து தனக்கு சொந்தமான இடங்களை அழகப்பன் ஏமாற்றி அதற்கான பணத்தை தரவில்லை என நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து மோசடியாக ஆவணங்களை மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தனக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணத்தை ஏமாற்றிய அழகப்பன் மற்றும் ஆறுபேரை கைது செய்ய வலியுறுத்தியதுடன் கௌதமி சொத்து அவசர ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் மத்திய குற்ற பிரிவு கூடுதல் ஆணையரிடம் முறையிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon