திறந்தவெளி கால்வாயில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திறந்தவெளி கால்வாயில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில் சிறுவன் திறந்தவெளி கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளான்.
நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மழலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த இரண்டு பெண்கள் மின்னல் தாக்கிய உயிரிழந்தனர். கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி தெலுங்கானா வானிலை மையம் அறிவித்துள்ளது.






