ஆன்லைன் மூலம் போதை மாத்திரையை பொடியாக்கி பயன்படுத்திய இளைஞர்கள்..!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஆன்லைனில் போதை மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தி வந்த ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தியூர் இடத்தில் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் இளைஞர் சிலர் தொடர்ந்து தவறாக செய்து வருவதாக போலீசருக்கு புகார்கள் வந்துள்ளனர்.
அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித்திரிந்த அனைவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஐவரும் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி பொடியாக அரைத்து பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இளைஞர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயிரக்கணக்கான மாத்திரைகள் போதை ஊசிகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் ஐவரையும் நீதிமன்றத்தில் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.





