பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி..பைக்கோடு உள்ளே விழுந்த நபர்..!
திருச்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு குழாய் பதிவுகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்துடன் ஒருவர் தவறி விழுந்தார்.
திருச்சி தெம்மூர் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது தெரியாமல் தவறி விழுந்தவரையும் இருசக்கர வாகனத்தையும் அக்கம் பக்கத்தினர் மீட்டனர். பள்ளத்தை பாதுகாப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





