நாய் கடித்ததை மறைத்த மகன்.. நாய் போல் குரைத்துக் கொண்டே மடியில் பிரிந்த உயிர்..!
உத்திரபிரதேசத்தில் நாய் கடியால் ரேபிஸ் நோய் பரவி 14 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சுபாஷ் என்ற 14 வயது சிறுவனுக்கு 45 நாட்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது.
அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலும் சிறுவன் இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 1ம் தேதியிலிருந்து சிறுவனை மீட்கும் நடவடிக்கைகளும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தண்ணீரை கண்டால் பயப்படுவதும் சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் நாய் போன்ற குரைத்துக் கொண்டிருந்தும் இருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரித்த பொழுது நாய் கடித்தது தெரிய வந்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது தந்தையின் மடியிலேயே உயிரிழந்துள்ளான். பரிசோதனையில் அந்த சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் நோய் பரவி உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.





