தேர்வில் குறைவான மதிப்பெண்.. கன்னத்தில் ஓங்கி அறைந்த தந்தை.. விரக்தியில் மாணவி..!
தேர்வில் தோல்வியடைந்த மகளை பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் வைத்து தந்தை கண்டித்ததால் 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கற்றூரை சேர்ந்தவர் நந்தினி. 13 வயதானவர் திருக்கச்சூர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளியின் நடைபெற்ற தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியர் கூட்டத்தில் நந்தினியின் தந்தை ஜானகிராமனிடம் ஆசிரியர்கள் குறை கூறினர். அப்பொழுது கூட்டத்தில் மகளை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று பள்ளியில் அழுது கொண்டே இருந்த சிறுமி பள்ளி முடிந்துவிடு திரும்பிய பொழுது வீட்டின் பின்புறம் உள்ள கோட்டையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






