--- --:--:-- --

எம்எல்ஏ சதாசிவத்திடம் மூன்றரை மணி நேரம் விசாரணை..!

2

ருமகள் அளித்த வரதட்சணை புகாரில் மேட்டூர் பகுதி சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் மூன்றரை மணி நேரம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் மீது மருமகள் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார்.

 

அதன் பேரில் சூரமங்கலம் மகளிர் காவல்துறையினர் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மகன் ஷங்கர் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.

 

அவர்களிடம் காவல் ஆய்வாளர் சசிகலா தனித்தனியே விசாரணை செய்தார். முதலில் சதாசிவத்திடம் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு மகனுடன் குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்றது.

 

Right Menu Icon