திமுக அரசுக்கு இதைவிட தலைகுனிவு வேண்டுமா..?
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “தலைநகரில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றதை விட திமுக அரசுக்கு வேறென்ன தலைகுனிவு இருக்க முடியும்” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.அதுமட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களின் அடாவடித்தனமும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.
ரயிலிலும், பஸ்ஸிலும் கத்தி, வாளை எடுத்துக்கொண்டு பயணிப்பது; பொது இடங்களில் மோதிக்கொள்வது என கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.அப்போது ஒருதரப்பு மாணவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவமானது சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கையில் நாட்டு வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தது? ரவுடிகளை போல மாணவர்கள் அராஜகம் செய்யும் அளவுக்குதான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என பல்வேறு கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.





