இதை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என ஆளுநரை விமர்சித்த ப.சிதம்பரம்
நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட வேண்டுமா வேண்டாமா என இந்திய குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். அப்பொழுது கையெழுத்து போட வேண்டுமா வேண்டாமா என்பதை இந்திய குடியரசு தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்ற ப. சிதம்பரம் தனக்கு இல்லாத அதிகாரத்தை தான் செயல்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் கூறுவதை கேட்டு சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை என விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





