திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா, மாணவ – மாணவியர் தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை அள்ளினர். சாதனிய வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூரில், கல்விச்சேவையில் தனிமுத்திரை பதித்து, தரமான கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்கி வருகிறது 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கல்வியுடன் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சுதந்திர தினம், குடியரசு தினம், சரவதேச யோகா தினம், ஊழல் ஒழிப்பு வாரம் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவித்து மாநில அளவில் போட்டிகளுக்கு தயார்ப்படுத்தப்படுகின்றனர். திறமையுள்ள மாணவர்களை அடையாளம் காணும் வகையில் விளையாட்டு விழா நடத்தப்படுகிறது.
அந்த வகையில், அண்மையில் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விளையாட்டு விழாவுக்கு பள்ளி தலைவர் நிக்கான்ஸ் ஈ. வேலுச்சாமி தலைமை தாங்கினார். 15,வேலம்பாைளையம் காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் முத்திரை பதித்து சாதனை படைத்த மாணவர்களுக்கும், தேசிய அளவிலான அணிக்குதேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கும், காவல் ஆய்வாளர் தாமோதரன் சிறப்பு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
அத்துடன், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கும், ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பொருளாளர் சுருதிஹ ரீஷ், முதல்வர் ஏ.எஸ். மணிமலர் ஆகியோர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், முத்தமிழ் சங்கம் திருப்பூர் சார்பாக இளையோர் விருது பெற்ற 10-ம் வகுப்பு மாணவி மேகாபிரிய தர்ஷினிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியரின் பெற்றோருக்கு விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து தரப்படுகிறது. அந்த வகையில், பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவி ஸ்ரீஷாவின் தந்தை சுகுமார், கடந்தாண்டு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு, ஜெய்சாரதா பள்ளி நிர்வாகம் சார்பில், காப்பீட்டுத்தொகை ரூ.2 லட்சத்து 12ஆயிரத்து 500- க்கான காசோலையை, காப்பீடு நிறுவனமான யுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, மாணவியின் தாயாருக்கு வழங்கினர்.
இந்த விழாவில் பள்ளி அறக்கட்டளை நிர்வாகிகள், அலுவலர்கள், ஆசிரியர் – ஆசிரியைகள், பெற்றோர், மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்