--- --:--:-- --

பூட்டி இருந்த வீட்டினுள் மர்ம நபர்கள்.. கூச்சலிட்ட தாய் மற்றும் மகள்..!

5

சென்னையில் வீட்டில் திருடிக் கொண்டிருந்தவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குரோம்பேட்டை சாஸ்திரி காலணியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர்.

 

மதிய நேரத்தில் அவரது மனைவி மற்றும் கல்லூரியில் படிக்கும் மகளும் திரும்பி வந்த பொழுது வீட்டிற்குள் இருவர் நிற்பதை கண்டனர். உடனடியாக அவர்கள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து மடக்கி பிடிக்க முயன்றனர்.

 

இருவரில் ஒருவர் தப்பிவிடவே மற்றொருவனை பிடித்து குரோம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தனமூர்த்தி என்பதும் 11 சவரன் நகையை அவர்கள் திருடியதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon