--- --:--:-- --

சாலையில் சுற்றும் மாடுகள்.. அதிரடி காட்டிய மாநகராட்சி ஆணையர்..!

2

சென்னையில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மாட்டின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்பொழுது மாடுகளின் உரிமையாளர்கள் சிலர் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி மாடுகளை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது எனவும் கட்டுப்பாடுகளை மீறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon