--- --:--:-- --

பேரன் பேத்திக்கு அரிவாள் வெட்டு.. அதிர்ச்சியில் உயிரை விட்ட தாத்தா..!

4

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவனையும், தடுக்க முயன்ற அவரது தங்கையையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதை கண்டு அதிர்ச்சியில் அவர்களது தாத்தா உயிரிழந்தார்.

 

முனியாண்டி அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னதுரை வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இரவு வீட்டில் இருந்த மாணவன் சின்னதுரையை மூன்று பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அறிவாளால் வெட்டியது.

 

இதை தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டிவிட்டு அந்த கும்பல் ஓடியது. இந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேரப்பிள்ளைகளை மர்ம நபர்கள் வெட்டியதை கண்ட அதிர்ச்சியில் இருந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon