--- --:--:-- --

நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்..!

5

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

அதிகாலை 3 மணியளவில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றினர்.

 

அந்த பகுதியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது பிரபல இருசக்கர வாகனத்தில் அலெக்ஸ் தன் மூதாட்டியை கொன்றுவிட்டு தங்கக் காதணிகளை திருடி சென்றது தெரிய வந்தது. அந்த நேரத்தில் கொலை நடந்த இடத்திற்கு ஒன்றுமே தெரியாதது போல வேவு பார்க்க சென்ற போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

 

போதையில் மூதாட்டியை கொன்றதும் மூதாட்டியின் செல்போனில் இருந்தே காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon