இன்று மாலை ஆஜராக பொன்முடிக்கு அழைப்பாணை..!
அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதம் சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் ஆஜராகும்படி சம்மன் அளித்தது அமலாக்கத்துறை.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடியிடம் 7 மணி நேரம் விசாரணை நீடித்துள்ளது. நேற்று காலை முதல் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 19 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.






