பெற்றோரின் சண்டையால் பயந்து ஓடிய சிறுவன்.. கடைசியில் நேரந்த பயங்கரம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தில் பெற்றோர் சண்டையிட்டதால் அச்சத்தில் வீட்டை விட்டு ஓடிய 7 வயது சிறுவன் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.
தண்டலத்தை சேர்ந்த துளசி – கஸ்தூரி தம்பதியினர் இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்தனர். துளசி மது அருந்தி விட்டு அவ்வப்போது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு தம்பதிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின் சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது.
அப்போது அச்சத்தில் வீட்டிற்குள் ஓடிய சிறுவன் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.






