சென்னையில் ரவுடியின் மர்ம மரணம்..!
சென்னை எம்ஜிஆர் நகரில் திருட்டு தொடர்பாக விசாரணைக்கு சென்று வந்த ரவுடி உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் என அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஸ்ரீதர்.
இவர் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் குடும்பத்தினருடன் எம்ஜிஆர் நகருக்கு குடி பெயர்ந்தார். அங்கு அவர் வசிக்கும் குடியிருப்பில் நகை திருடு போனது தொடர்பானது விசாரணைக்கு மனைவியுடன் சென்று வீடு திரும்பும் வழியில் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த ஸ்ரீதருக்கு அதிக நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தற்பொழுது அவரது உடல் ஆய்வறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனக் கூறிய அதிகாரிகள் காவலர்கள் தவறு செய்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.






