--- --:--:-- --

பஜ்ஜி சாப்பிட ஆம்புலன்ஸை பயன்படுத்திய ஊழியர்கள்..கடும் நடவடிக்கை..!

7

சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் பொழுது நோயாளிக்கு விரைவில் சிகிச்சை கிடைக்க வேண்டி பொதுமக்கள் தங்களை நிறுத்தி வழி ஏற்படுத்தி தருவது கண்டு போக்குவரத்து போலீஸ்சாரும் ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல சாலையை கிளியர் செய்து தருவார்கள்.

 

அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளியின் உயிரை காப்பாற்ற வழங்கப்பட்டுள்ள இந்த சலுகையை பயன்படுத்தி மருத்துவமனை ஊழியர்கள் பஜ்ஜி சாப்பிட தேநீர் கடைக்கு சென்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 

ஹைதராபாத் பஷீர் பாத் பகுதியில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே சைரன் ஒலியுடன் சத்தமாக பாய்ந்து சென்றுள்ளது. போலீசாரும், பொதுமக்களும் ஆம்புலன்ஸ்க்கு சிரமப்பட்டு வலி ஏற்படுத்திய நிலையில் ஆம்புலன்ஸ் கடை அருகே சென்று நின்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

ஆம்புலன்ஸிலிருந்து இறங்கிய ஊழியர்கள் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு தேநீர் குடித்துள்ளனர். இதனை பார்த்த போக்குவரத்து போலீசார் விசாரிக்கவே ஊழியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

 

விசாரணையில் ஆம்புலன்ஸ் நோயாளி இல்லாதது தெரிய வரவே மோட்டார் வாகன சட்ட விதியின்படி விதிமீறலுக்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Right Menu Icon