--- --:--:-- --

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி வந்த மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்..!

3

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவர் டெல்லிக்கு வந்துள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக கூட்டணி அரசியலில் இணைந்தது மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

பின் துணை முதல்வராக அஜித் பவாரும் அவருடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றினார். எனினும் இவர்களுக்கான இலாக்காக்கள் இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க துணை முதல்வர் அஜித் பவாரும், அமைச்சர் ப்ரோபேல் பட்டேலும் டெல்லி வந்துள்ளனர். இதற்கிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப்ரொபேல் பட்டேல் ஒரு சில நாட்களில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

 

Right Menu Icon