நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைன் முறையில் தடகள போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இணையதளம் !!!
நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைன் முறையில் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இணையதளத்தை கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தொடர் போட்டி சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதித்தேர்வு கோவையில் வரும் 22ஆம் தேதி துவங்குகிறது.ஆண், பெண் என 30 வயது முதல் 100 வயது வரை உள்ள மூத்தோர் இப் போட்டியில் பங்கேற்கலாம்.

இந்த போட்டிகளில் ஓட்டப்பந்தயம்,நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் கோவை தனியார் ஹோட்டலில் இந்தப் போட்டிகளில் ஆன்லைன் முறையில் கலந்து கொள்வதற்கான இணையதளத்தை கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் துவக்கி உள்ளது.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் சிகாமணி போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஆன்லைனில் பெயர், பங்கேற்கும் போட்டி, வயது உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்வதோடு கட்டணத்தையும் அதிலேயே செலுத்தும் வசதி ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தடகள போட்டிகளில் கலந்து கொள்வதற்கான நாட்டிலேயே இது போன்ற இணைய தளம் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




