--- --:--:-- --

நிலம் வாங்கி தருவதாக லட்ச கணக்கில் மோசடி.. பாஜக நிர்வாகி கைது..!

1

நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்து 51 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர் சத்யராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி தருவதாக கூறி ஈஸ்வரன் என்பவரிடம் 51 லட்சம் ரூபாயை சத்யராஜ் பெற்றதாக கூறப்படுகிறது.

 

ஆனால் குறித்த காலத்தில் நிலத்தை வாங்கிக் கொடுக்காததால் பணத்தை திரும்ப கேட்ட ஈஸ்வரனுக்கு சத்தியராஜ் கொலைமிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை பதிவு செய்த காவல்துறையினர் பாஜக பிரமுகர் சத்யராஜை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon