--- --:--:-- --

தராசுக்குள் பல ரகசியங்கள்..மதுரை மார்க்கெட்டில் திடீர் சோதனை..!

4

துரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உரிய அனுமதியின்றி பயன்படுத்திய 25க்கும் மேற்பட்ட தராசுகளை பறிமுதல் செய்தனர்.

 

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பகுதியில் செயல்படக்கூடிய பழ மார்க்கெட்டில் 400 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தராசுகளின் எடை குறைவு குறித்து தொடர்ச்சியாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு புகார் வந்ததை தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றது.

 

அப்பொழுது தராசுகளுக்கான உரிய அங்கீகாரம், அனுமதி பெற வேண்டும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

 

Right Menu Icon