--- --:--:-- --

சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் புதிய உத்தரவு..!

1

செங்குன்றம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதிவுத்துறை தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

திருச்சி மாவட்டம் உறையூர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கடந்த 4ம் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதில் 2014 – 2018 ஆம் ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கூடுதல் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவற்றை உரிய காலத்திற்குள் வருமான வரித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத இரு சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

 

மேலும் அனைத்து சார்பதிவாளர்களும் 30 லட்சத்திற்கும் மேல் மதிப்பு கொண்ட விற்பனை விவரங்களை அனைத்து வருமானவரித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Right Menu Icon