--- --:--:-- --

மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்ட சிறப்பு அதிகாரி நியமனம்..!

2

களிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என சட்டமன்றத் தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது.

 

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

சுமார் ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

 

இந்நிலையில் திட்டத்திற்கான சிறப்பதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கல்வி சேவை கழகத்திற்கான மேலாண் இயக்குனராக உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon