--- --:--:-- --

ஆணுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்.. கத்தியால் குத்தி கொலை..!

10

சென்னை வேளச்சேரியில் ஓரினசேர்க்கைக்கு அழைத்து தொந்தரவு கொடுத்தவரை 22 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

 

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரும், தென்காசியை சேர்ந்த 22 வயதில் இளைஞர் ஒருவரும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளனர். அப்பொழுது மதுபோதையில் இருந்த கொளஞ்சி இளைஞரை ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கொலஞ்சியை கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon