பள்ளி ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த முன்னாள் மாணவர்..!
பெரம்பலூரில் பள்ளி ஆசிரியரை முன்னாள் மாணவர் துரத்தி அடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் ஆசிரியர் வாஞ்சிநாதன் என்பவரை அங்கு வந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவர் திடீரென தாக்கியுள்ளார்.
அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்த பொழுது தன்னை ஏன் அடித்தீர்கள் என்று கூறி வாஞ்சிநாதன் துரத்தி துரத்தி தாக்கியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.





