பட்டியலின பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்.. 3 பேர் மீது வழக்கு பதிவு..!
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் கொடுத்த வழக்கில் மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த பாக்கியலட்சுமி பதவியில் உள்ளார்.
அவரது வீட்டிற்கு சென்ற சிலர் விதி மீறி வீட்டு மனை பிரிவுக்கு அனுமதி வழங்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பாக்கியலட்சுமி சாதி பெயரை கூறி திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
அவர் கொடுத்த புகாரில் சதீஷ்குமார் ரங்கநாதன், கிருஷ்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





