தூத்துக்குடியில் சுழன்றடித்த சூறாவளி காற்று..!
தூத்துக்குடி துறைமுகத்தில் கடும் சூறாவளி காற்று வீசியது வங்கக்கடலில் ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
அதன் காரணமாக குமரி கடல் பகுதியில் மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், மேற்கு வங்க கடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் மாலை நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





