இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெண் சிறைவாசிகள் பணியாற்ற கட்டப்படும் பெட்ரோல் பங்க்..!
சென்னை புழல் சிறையில் உள்ள பெண் கைதிகள் பணியாற்றும் வகையில் கட்டப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகள் பணியாற்றும் வகையில் முதன் முறையாக சென்னை புழல் அருகே பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது. 1170 சதுர அடியில் ஒரு கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புழல் சிறை அருகே பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.
அதன் கட்டுமான பணிகளை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சிறைத்துறை டிஜிபி உள்ளிட்ட ஒரு ஆய்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி சிறைவாசிகள் தங்களது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் உதவ பணமீட்ட பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





