EDயை மிரட்டினார் செந்தில் பாலாஜி.. நீதிமன்றத்தில் ED சொன்ன தகவல்..!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்து பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் அதிகாரிகளை மிரட்டும் தோணியில் செந்தில் பாலாஜி நடந்து கொண்டதாகவும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கைது செய்ததாகவும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேகலா தரப்பில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில் அமலாக்கத்துறை குறிப்பில் ஜூன் 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு சோதனை நிறைவடைந்ததாக குறிப்பிட்ட நிலையில் நள்ளிரவு 1:39 மணிக்கு தான் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்றும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லையா எனவும் தெரிவித்துள்ளார். எனவே தனது கணவர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





