தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்..!
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு காரணமாக இருக்கும் தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்களால் பங்கேற்க முடியாத சூழல் குறித்து அதில் உண்மை தன்மையை வெளிக்கொணரும் வகையில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பட்டியலையும், அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு எழுதிய கடிதத்தையும் அந்த கடிதம் யாருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற தவறு இனிவரும் காலங்களில் நிகழாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.






