சிறுநீரை அருந்தக்கூறி இளைஞரை கட்டாயப்படுத்தி கொடுமை..!
துபாயில் உறவினர் கொடுத்த தங்கத்தை கேட்டு நாகையில் இளைஞரை கடத்தி தாக்கிய புகார் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகையை சேர்ந்த சந்தோஷ் சிவம் அண்மையில் துபாயிலிருந்து தமிழகம் வந்திருக்கிறார்.
அப்போது வாசிம் என்பவரிடம் சில பொருட்களை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது. சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வாசிம் கொடுத்து அனுப்பிய பொருளை 400 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது.
அதை கைப்பற்றிய அதிகாரிகள் வரி செலுத்துமாறு கூறி அதற்குரிய ரசீதை வழங்கியுள்ளனர். இந்நிலையில் நாகை திரும்பிய சந்தோஷ்சிடம் வாசிம் கொடுத்த பார்சலை கேட்டுள்ளனர். அதை அதிகாரிகள் கைப்பற்றி விட்டதாக சந்தோஷ் கூறியதை அவர்கள் நம்பவில்லை.
இதனையடுத்து சந்தோஷை கடத்திச் சென்று தங்கும் விடுதியில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கி சிறுநீரை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதோடு கைபேசி, மோதிரம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பான புகாரில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





