--- --:--:-- --

அகிலேஷ் யாதவை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..!

4

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை நாளை சந்திக்கிறார். மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.

 

இதன் தொடர்ச்சியாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை கெஜ்ரிவால் சந்திக்கிறார். லக்னோவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon