ஒடிசா ரயில் விபத்தில் காயம் கூட இல்லாமல் பலியான 40 பேர்..!
ஒடிசா ரயில்வே விபத்தில் உயிரிழந்த 225 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்கப்பட்ட 40 உடல்களில் வெளிப்புற காயங்கள் ஏதும் இன்றி இருந்ததாகவும் ரயில் தடத்திலிருந்து மேல்நிலை மின்கம்பியில் இருந்து விழுந்ததில் அவர்கள் பலியாகி இருக்கலாம் எனவும் மீட்பு பணியை பார்வையிட்ட காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று ரயில்வே காவல்துறையினர் பதிவு செய்த முதல் அறிக்கையில் பல பயணிகள் இடிபாடுகள் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





