கங்கை ஆற்றில் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த பாலம்..!
பீகார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஊர்களை இணைக்கும் இந்த பாலம் இடிந்து விழுவது இது இரண்டாவது முறையாகும். இதன் திட்டமதிப்பு 1,750 கோடி ரூபாயாகும்.
இதன் காட்சிகளை அங்கிருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





