மகன்களை தேடிய பெற்றோர்.. கரையில் இருந்த ஆடை..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விருதாச்சம்பட்டி முனியப்பன் கோவில் காட்டுவளவை சேர்ந்த பரணிதரன் மற்றும் அவரது உறவினர் கிரித்திஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் கிணற்றில் இறங்கி இருக்கிறார்கள்.
அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். கரையில் இருவரின் உடைகள் இருப்பதைக் கண்ட அந்த பகுதி மக்கள் தேடியதில் இருவரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





