உணவு ஆர்டர் செய்தவரின் வங்கி கணக்கில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை..!
சென்னையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி தன்சோ செயலியில் உணவு ஆர்டர் செய்த சிறிது நேரத்திலேயே உணவு டெலிவரி ஆகிவிட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி இது குறித்து புகார் தெரிவிக்க தன்சோ வாடிக்கையாளர் எண்னை கூகுளில் தேடி உள்ளார். அப்பொழுது கிடைத்த மொபைல் எண்னை தொடர்பு கொண்டு மறுமுனையில் ஹிந்தியில் பேசிய நபரிடம் நடந்த விபரத்தை தெரிவித்து தனது பணத்தை வங்கி கணக்கில் மீண்டும் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
ஒரு செயலியை டவுன்லோட் செய்து பண்ணினால் பணம் திரும்ப வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். அதை நம்பி ஆப்பை டவுன்லோடு செய்து ஸ்கேன் செய்த பொழுது அவரது வாங்கி கணக்கில் இருந்த 40,000 பணம் திருடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





