--- --:--:-- --

தர்காவில் மனைவியை கொலை செய்த கணவன்..!

7

நெல்லையில் தர்காவில் வைத்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது. நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த தம்பதி இம்ரான் கான் – சஜிதா பேகம். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சஜிதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் மனைவியை சமாதானப்படுத்தி இம்ரான் கான் தனது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். செல்லும் வழியில் குலத்தங்கரை தர்காவில் இருவரும் பிரார்த்தனை செய்துள்ளனர். அப்பொழுது திடீரென தான் மறைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சஜிதாவை சரமாரியாக தாக்கிவிட்டு இம்ரான் கான் சென்றுள்ளார்.

 

அதில் சம்பவ இடத்திலேயே சஜிதா உயிரிழந்த நிலையில் தம்பியோடிய இம்ரான் கானை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon