ஆவின் பால் பண்ணையில் இரவில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு..!
சென்னை அம்பத்தூரில் ஆவின் பால்பண்ணையில் இரவில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பால் பாக்கெட்டைகளை வினியோகம் செய்வதிலும் ஆவின் வாகனங்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் பால் பண்ணைக்கு சென்று ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். தொடர்ந்து பால் உற்பத்தி குறித்த ஆய்வு, பணியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தவர்களிடம் பேசியவர் பால் விநியோகம் தாமதத்திற்கு 12 பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவைகள் ஒவ்வொன்றாக சீர் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.





