11ஆம் வகுப்பு மாணவி, 12ஆம் வகுப்பு காதலன்..! தலை வெட்டப்பட்டகொடூரம்..!
தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் கழுத்து துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். வீர சின்னம்மாள் புரத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கமலேஷ்வரன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்ததாக தெரிகிறது.
இவர்களின் காதல் இரு குடும்பத்தாருக்கும் தெரிய வந்தது. பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்ணின் பெற்றோர் கமலேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்று கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை என பெற்றோர் பழனிச்சட்டி பாளையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை செய்த போலீசார் வெட்டப்பட்டு கிடந்த கமலேஷ்வரியின் சடலத்தை கைப்பற்றினர். மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர் கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.





