--- --:--:-- --

பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிப் போக காரணம் இதுதான்..!

4

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் ஜூன் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள் தேர்வுகள் முடிக்கப்படும் என கடந்த ஜனவரியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் தேர்வுகள் மே 25ஆம் தேதி தொடங்கி ஜூன் இரண்டாம் தேதி வரை நடைபெறும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் முடிவுகள் வருவதற்கு தாமதமாகும் என்பதால் உயர்கல்வியில் சேர முடியாத நிலை ஏற்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

திருத்தும் பணிகளுக்கு ஒப்பந்தம் விடுப்பதற்காக பேராசிரியர் பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த பணிகளை விரைந்து முடிக்காததை தேர்வு முடிவுகள் தள்ளி போவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்ட பொழுது மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாத வகையில் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

 

 

Right Menu Icon