பேருந்து நிலையத்தில் கிடந்த மர்ம சடலம்..!
திருவண்ணாமலை அருகே மர்மமாக உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை சாலையில் சமுத்திரம் கிராமம் அருகில் சாலையோரம் உள்ள பகுதியில் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது.
அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






