இரண்டு நாட்களாக அனாதையாக கிடந்த கார்.. கதவை திறந்த பொழுது மூட்டை மூட்டையாக இருந்த கஞ்சா..!
ராமேஸ்வரத்தில் கேட்பாரற்று கடந்த சொகுசு காரில் 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க தமிழக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கோயில் அருகே இரண்டு நாட்களாக சொகுசு கார் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் காரை சோதனை செய்தனர்.
அப்பொழுது காரில் 160 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த காவலர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






