தந்தையை கவனிக்க மறுத்த மகன்கள்..இறுதியில் நேர்ந்த சோகம்..!
கன்னியாகுமரியில் தன்னை கவனித்துக் கொள்ளாத மகன்களுக்கு எதிராக போராடி நீதி பெற்ற முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்ற 84 வயது முதியவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
ஆனால் தந்தையை கவனிப்பதில் திருமணம் ஆன இரண்டு மகன்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது மகன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தந்தையை உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.
மூன்றாவது மகனுக்கு திருமணமாகாததால் மன உளைச்சல் அடைந்தவர் முதியோர் பாதுகாப்பு நல தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ளார். இதையடுத்து மூன்று மகன்களையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் தந்தையை கவனிக்க மூன்று பேரும் மாதம் தலா 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் 15 நாட்களுக்கு ஒரு மகன் என சுழற்சி முறையில் தந்தையை பராமரிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார்.
பல நாள் போராட்டத்தால் கிடைத்த பலனை அனுபவிக்க முடியாமல் முதியவர் திடீரென உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






