48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் : அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க தவறினால் அண்ணாமலை இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்படும் என உதயநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வழக்கறிஞர் வில்சன் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.






