மண்ணடி கட்டட விபத்து.. உரிமையாளர் மீது வழக்கு பதிவு..!
புதுப்பிக்கும் பணியின் பொழுது கட்டடம் இடிந்த நிலையில் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. கட்டிடம் இடிந்த இடத்தை நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நேரில் பார்வையிட்டார்.
மண்ணடியில் பழைய கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஐந்து பிரிவுகளில் கட்டட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






