வானவில்லின் இறுதியை பார்த்த நபர்..வைராலாகும் வீடியோ..!
வானவில்லின் இறுதியை ஒருவர் கண்டுபிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக அனைத்து வயதினருக்கும் வானவில்லின் இறுதி அல்லது அதன் தொடக்கத்திற்கு செல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒருவர் வானவில்லின் இறுதி என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்கம் எங்கே என கேள்வி எழுப்பிய நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பழமொழியின் படி வானவில்லின் இறுதியில் தங்க பானை இருக்கும் என்பதால் அவர் அதை கேட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இந்த பழமொழியை கிண்டல் செய்யும் விதமாக அவர் இது ஒரு ஊழல் என்றும் தங்கம் எங்கே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





