--- --:--:-- --

சுனாமி போல் எழும்பிய அலையால் விமான நிலையத்தில் நடந்த பேரதிர்ச்சி..!

6

இங்கிலாந்தில் உருவாகியுள்ள நோவா புயலால் கடல் அலைகள் எழும்பும் காட்சிகள் காண்போரை திகைக்க செய்துள்ளது. நோவா புயல் ஆனது மணிக்கு 154 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் இங்கிலாந்தின் பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

 

இதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோவா புயலால் கடல் அலைகள் எழும்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை திகைக்க செய்து வருகிறது.

 

மேலும் ஐக்கிய விமானம் ஒன்று லண்டனில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்த பொழுது கடுமையான காற்றினால் விமானம் கீழே தரை இறங்க முடியாமல் சென்றது. பின்னர் அந்த விமானத்தை விமானி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பாக  தரையிறக்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon